குவியம்

ஒளிப்படக்கலை உலகம் எல்லையற்று பரந்து விரிந்து கிடக்கிற ஒரு கலைவடிவம். ஒளிப்படக்கலையை உணர்வதற்கும் நம் படைப்பாக்கத்திறன் கலந்து வெளிப்படுத்துவதற்கும் நம் வாழ்நாள் முழுவதுமான தொடர் இயக்கம் அவசியமான ஒன்று. அத்தகைய தொடர் இயக்கத்தில் குவியம் நூல் உங்களுக்கு உற்ற தோழனாய் இருக்கக்கூடும்.

மேலும் வாசிக்க
Amilthini Books Kuviyam Offer

குவியம்

எளிய தமிழில், ஒளிப்படக்கலை சார்ந்த புத்தம் புதிய தமிழ்ச் சொற்களின் உருவாக்கத்தில், 176 முழு வண்ணப்பக்கங்களில், 22 தலைப்புகளில், 100க்கும் மேற்பட்ட ஒளிப்படங்களுடனும் குறிப்பு ஓவியங்களுடனும் ஒளிப்படக்கலையின் முழுமையான புரிதலை நோக்கி முன் நகர்த்துகிற இலக்கோடு, குவியம் நூல் எழுதப்பட்டுள்ளது.

நூலைப் பெற

நூல் ஆசிரியர்

அமிழ்தினி தனசேகரன்

ஒளிப்படக்கலை சார்ந்து தொடர்ந்து இயங்கி வருபவர். 100க்கும் மேற்பட்ட ஒளிப்படக்கலை சார்ந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். பெஸ்ட் போட்டாகிராபி டுடே இதழ், கேமரா அக்ஸ்கியுரா மின் இதழ் ஆகியவற்றில் கட்டுரைகளை எழுதியுள்ளார். 50க்கும் மேற்பட்ட ஒளிப்படக்கலைப் பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளார். “குவியம்” இவரது முதல் நூல்.

மதிப்புரைகள்

Amilthini Books © Allrights Reserved